இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்


இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 18 July 2023 12:45 AM IST (Updated: 18 July 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என பள்ளி மேலாண்மை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகை அருகே அழிஞ்சமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜ திலகம் தலைமை தாங்கினார். பள்ளியின் இடைநிலை ஆசிரியர் அன்புச்செல்வன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் கமலாதேவி கலந்து கொண்டு பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களின் கல்வி உள்ளிட்டவை குறித்து விளக்கி பேசினார். இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்.பழைய மாணவர்களை கொண்டு குழு அமைக்க வேண்டும். துப்புரவு பணியாளரை உடனே நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் இல்லம் தேடி கல்வியாளர் முத்துலட்சுமி, தன்னார்வலர்கள் நிவேதனா, மதிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story