நெல் வயலில் களை எடுத்த மாணவர்கள்
நெல் வயலில் மாணவர்கள் களை எடுத்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள விசாலயங்கோட்டை கலாம் கவி கிராமத்தில் உள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நெல் வயல் அறுவடை திருவிழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கருணாநிதி அறுவடை திருவிழாவின் நோக்கத்தை எடுத்துரைத்தார். விழாவின் ஒரு பகுதியாக விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கங்களை கல்லூரி பேராசிரியர்கள் கூறினர். எஸ்.ஆர். பட்டினத்தை சேர்ந்த விவசாயி நிலா நெற்பயிரில் கோரைப்புல் அதிகமாக வளர்ந்து மகசூலை பாதிப்பதாக தெரிவித்தார். உடனே கல்லூரியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் கண்டர மாணிக்கம் தொழிற்பயிற்சி நிலைய 85 மாணவர்களை அங்கு அனுப்பி வயலில் காணப்படும் கோரைப்புல் வகைகளை முழுவதுமாக அகற்ற செய்தார். இதே போல் கோரிக்கை விடுத்த மற்ற விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண செய்தார். இதனால் விவசாயிகள் அவருக்கும், மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதில், வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் முத்துராஜ், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜா, பயிற்சி அலுவலர்கள் ரவி, அண்ணாதுரை, விக்னேஸ்வரன், சரவணன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.