அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி
பேராவூரணி அருகே பின்னவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றனர்.
பேராவூரணி;
பேராவூரணி அருகே பின்னவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி 2 மாணவர்கள் ஊரக திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாவர். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு கடந்த டிசம்பர் 17-ந் தேதி நடைபெற்றது. இத் தேர்வுக்கான தேர்ச்சி விவரம் வெளியானது. இதில் பின்னவாசல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் கணீஷ்குமார், கீதன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சேகர்மணி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் பாராட்டினர்.