மாணவர்கள், இளைஞர்கள் திறன் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்


மாணவர்கள், இளைஞர்கள் திறன் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
x

மாணவர்கள், இளைஞர்கள் திறன் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் திறன் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் வருகிற 30-ந்தேதி ஆகும்.

திறன் போட்டிகள்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. பல்கலைக்கழகம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த, பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், பள்ளி, ஐ.டி.ஐ. படித்த, தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, படிக்கும் மாணவ, மாணவிகள், மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் வருகிற செப்டம்பர் மாதம் 2024-ம் ஆண்டு சர்வதேச திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் naanmudhalvan.tn.gov.in/tnskills என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு tnskills@naanmudhalvan.in வலைதளத்தினை பார்வையிடலாம்.

30-ந்தேதி கடைசி நாள்

10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30-ந்தேதி ஆகும். இதற்கான வயது வரம்பு 1-1-1999 அன்றும் ஒரு சில திறன் போட்டிகளுக்கு 1-1-2002 அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story