வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டர்.
ஆய்வு
சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா நியமிக்கபட்டுள்ளார். இதையொட்டி அவர் சிவகங்கை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் கலெக்டர் மற்றும்அதிகாரிகளுடன் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
இதையொட்டி படமாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டுமான பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நமச்சுவாயபுரம் கண்மாயில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டார்.
வகுப்பறை கட்டிடம்
மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்ட உபகரணங்களையும், ரூ.1.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறையினையும், கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்பு மேம்பாட்டின் கீழ் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை நகராட்சியில் இளைஞர்கள் போட்டி தோ்வில் பங்கேற்கும் வகையில் படிப்பதற்காக ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டுமான பணிகளையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ்சிவகங்கை செக்கடி ஊருணியில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைத்து ஊருணியை சுற்றி வேலி அமைக்கும் பணியினையும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.