மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை

இளையான்குடி,

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்.லால் வேனா இளையான்குடி தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி, இந்திரா நகர் பள்ளி வளாகம், அரசு மருத்துவமனை, புதூர் புதிய நீர்த்தேக்க தொட்டி, மேலதுறையூர் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பணிகளை ஆய்வுகள் செய்தார். பரமக்குடி சாலையில் உள்ள பயனற்ற நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதற்கிடையே அவரிடம், ஆழிமதுரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் தங்கள் ஊரில் நடைபெறும் நலத்திட்ட பணிகள், கண்மாய் மராமத்து பணிகள் போன்றவற்றில் குறைகள் இருப்பதாக புகார் மனு கொடுத்தனர். அது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், பேரூராட்சிகளின் இயக்குனர் ராஜா, இளையான்குடி தாசில்தார் அசோக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் நஜிமுதீன், துணைத் தலைவர் இப்ராஹிம், பேரூராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story