சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தேசிய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள் ஆய்வு
சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தேசிய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதை 150 ஆக உயர்த்துவது குறித்து தேசிய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்ட டாக்டர்களை கொண்ட உறுப்பினர் குழுவினர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்தனர். இவர்களை மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், துணை முதல்வர் ஷர்மிளா திலகவதி, நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி அலுவலர்கள் முகமது ரபி, தென்றல், மிதுன்குமார், மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் வரவேற்றனர்.
பின்னர் அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் நேரடி ஆய்வு செய்தனர். அத்துடன் மகப்பேறு மருத்துவப் பிரிவு, அறுவை அரங்கு போன்றவைகளை பார்வையிட்டு போதுமான அளவு மருத்துவ கருவிகள் உள்ளதா என்றும் போதிய வசதிகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். அத்துடன் அவசர கால விபத்து பிரிவில் உரிய முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை தரப்படுகிறதா? என்று கேட்டறிந்தனர்.