சாலை பணிகளை அலுவலர்கள் ஆய்வு


சாலை பணிகளை அலுவலர்கள் ஆய்வு
x

ஓசூரில் சாலை பணிகளை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய உள் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓசூர் முதல் தொரப்பள்ளி-பைரமங்கலம் சந்திப்பு வரை ரூ.57 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை சேலம் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி, கோட்டப்பொறியாளர் சரவணன், உதவி கோட்டப்பொறியாளர் ராஜகாந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன், ஓசூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் செந்தில்குமரன், திருமால்செல்வன், பத்மாவதி, வெங்கட்ராமன், ரேணுகாதேவி, வெண்ணிலா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story