மேயர் சரவணன் ஆய்வு


மேயர் சரவணன் ஆய்வு
x

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மேயர் சரவணன் ஆய்வு

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் 42-வது வார்டு 'சி' காலனியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டி மற்றும் 41-வது வார்டு பெருமாள்புரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை நேற்று மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அவர்கள் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்து மற்ற பகுதிகளுக்கு எவ்வாறு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது என்றும் பார்வையிட்டனர். தொடர்ந்து பெருமாள்புரம் சுகாதார அலுவலகத்திலும் ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது, உதவி செயற்பொறியாளர் ராமசாமி, இளநிலை பொறியாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story