அரசு முதன்மை செயலாளர் ஆய்வு


அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.

தேனி

தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரான கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திக் நேற்று ஆய்வு செய்தார். ஆண்டிப்பட்டி பேரூராட்சி, சில்வார்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் மஞ்சளாறு அணை மீன் பண்ணையில் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story