கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம்


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம்
x

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கரூர் மற்றும் குளித்தலை சரக கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு இணைப்பதிவாளர் கந்தராஜா தலைமை தாங்கி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து எடுத்துரைத்தார். இதில் துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், அபிராமி, கூட்டுறவு சார்பதிவாளர்கள், பொதுவினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story