நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கை மறுவாழ்வு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்


நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கை மறுவாழ்வு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கை மறுவாழ்வு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் பங்கேற்றார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கை மறுவாழ்வு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் பங்கேற்றார்.

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கு நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கை மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணைய தலைவர் வெங்கடேசன் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், சுகாதாரம் தொடர்பான பொருட்கள் வழங்குதல், குடும்ப நலநிதி பிடித்தம் செய்தல் தொடர்பான பணிகள் குறித்து மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சி ஆணையர்களிடம் கேட்டறிந்தார்.

சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதா?

மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் முழுமையான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதா, தூய்மை பணியில் உள்ள பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா, மேலும் குறைகள் ஏதும் இருப்பின் தெரிவித்திடவும் என சுகாதார பணியாளர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக, அம்பேத்கர் நகருக்கு சென்று அங்கு வசிக்கும் தூய்மை பணியாளர்களிடம் தேவைகள் ஏதேனும் இருக்கிறதா என்றும் நேரில் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் (பொறுப்பு) அம்பிகாபதி, உதவி கலெக்டர்கள் அர்ச்சனா, யுரேகா, மயிலாடுதுறை நகராட்சி என்ஜினீயர் சணல்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story