குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில் குடியரசு தினவிழாவில் அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் பயனாளிகளின் பட்டியலை துறைகளிடமிருந்து பெற்று இறுதி செய்து, பயனாளிகளை ஒருங்கிணைத்து அனைத்து நலத்திட்டங்களும் வழங்கிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை ஒத்திகை செய்து இறுதி செய்துகொள்ள வேண்டும். முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், பசுமைக்குழு, இல்லம் தேடி கல்வி, புதுமை பெண் ஆகிய முக்கியமான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.