ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்


ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:32 AM IST (Updated: 14 Feb 2023 11:57 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

கரூர்

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் திருச்சி மண்டல காவல் அலுவலர்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் தலைமை தாங்கினார். அப்போது அவர், ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கல், கள்ளச்சந்தை தொடர்பான குற்றங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், மேலும் மேற்கண்ட குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கான ஆலோசனைகளையும், குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.

இதில், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் துறையின் சூப்பிரண்டு சுஜாதா, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய சரகங்களின் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.


Next Story