சிறுபான்மையினர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வு கூட்டம்


சிறுபான்மையினர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வு கூட்டம்
x

சிறுபான்மையினர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர்களுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து சென்னை சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் டாம்கோ மேலாண்மை இயக்குனர் சுரேஷ்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் வகித்தார். கூட்டத்தில் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் குறித்தும், பிரதமரின் 15 அம்ச திட்டம், பிரதம மந்திரியின் சிறுபான்மையினர்களுக்கான மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் ஒப்படைக்கப்பட்ட பணிகள் குறித்தும், வக்பு நிறுவனங்களின் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்குதல் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் டாம்கோ மேலாண்மை இயக்குனர் சுரேஷ்குமார் விவாதித்தார். முன்னதாக பாரத பிரதம மந்திரியின் சிறுபான்மையினர் மக்கள் மேம்பாடு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை சுேரஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story