Normal
மயிலாடுதுறையில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மயிலாடுதுறையில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) வருகிறார். அதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை, நீர்வளத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர்.லலிதா, தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறை இணை இயக்குநர் முருகன்னன், இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) சேகர், உதவி கலெக்டர்கள் பாலாஜி (மயிலாடுதுறை), நாராயணன் (சீர்காழி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story