சிவகளையில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால உலோக பொருட்கள் நவீன கருவிகள் மூலம் ஆய்வு
சிவகளையில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால உலோக பொருட்கள் நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
தூத்துக்குடி
ஏரல்:
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் அகழாய்வில் கிடைத்த பழங்கால உலோக பொருட்களை பெங்களூருவை சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடிஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த உலோக தொல்லியல் ஆய்வாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாரதா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அந்த குழுவினர் நேற்று ஏரல் அருகே சிவகளையில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உலோக பொருட்களை நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். உலோக பொருட்களில் உள்ள கனிமங்களை பிரித்தறியும் வகையில் ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story