வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஆய்வு
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு குழு ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், உண்மைக்கு புறம்பான வழக்குகளை விவாதித்து முடிவு செய்தல் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை, அரசு பொது வழக்கறிஞரின் செயல்பாடு மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தநிகழ்வில், சின்னதுரை எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.