இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஆய்வு


இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஆய்வு
x

கம்பம் கம்பராயப் பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி ஆய்வு செய்தார்.

தேனி

கம்பம் கம்பராயப்பெருமாள் கோவில் மற்றும் காசிவிஸ்வநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இணை ஆணையர் பேசுகையில், கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி கம்பராயப்பெருமாள் மற்றும் காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆய்வு செய்தபோது கம்பம் எம்.எல்.ஏ. மற்றும் கோவில் உபயதாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதில் கும்பாபிஷேகம், திருமணமண்டபம், சஷ்டி மண்டபம் மேற்கூரை பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், கோவில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தோரண வாயிலை மாற்றி ராஜகோபுரம் கட்டி கொள்ளுதல் உள்பட 14 கோரிக்கைகளுக்கு மண்டல கமிட்டி அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்ந்து மாநில கமிட்டி நிதி ஒதுக்கியவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றார்.

இதையடுத்து எம்.எல்.ஏ. பேசுகையில், அன்னதான மண்டபம், கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வரும் வகையில் இணைப்பு பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன், கோவில் செயல் அலுவலர் சுரேஷ், கம்பம் தி.மு.க. பொறுப்பாளர்கள் வக்கீல் துரை நெப்போலியன், சூர்யா செல்வக்குமார் மற்றும் கோவில் உபயதாரர்கள் கலந்துகொண்டனர்.


Next Story