கோர்ட்டு வளாகம் அமைக்க ஆய்வு


கோர்ட்டு வளாகம் அமைக்க ஆய்வு
x

கே.வி.குப்பத்தில் கோர்ட்டு வளாகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வேலூர்

கே.வி.குப்பம் பஸ்நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள வாடகை கட்டிடத்தில் குற்றவியல், உரிமையியல் கோர்ட்டுகள் அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சாந்தி, விரைவு நீதிமன்ற நீதிபதி பி.ரேவதி, நீதித்துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர் கண்ணன், அரசு வக்கீல்கள் உள்ளிட்டார் உடன் இருந்தனர். இந்த இடத்தில் இதற்கு முன்னதாக தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story