முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
திருப்பூர்


உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தலைமை தாங்கினார்.பேராசிரியர்கள் வெள்ளியங்கிரி, பாரதிதாசன், ராமநாதன், ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் கல்லூரி கால நினைவுகளைப்பகிர்ந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும்,சிறப்புப்பரிசுகளும் வழங்கப்பட்டன. நிறைவாக பசுமை மாறா நிகழ்வுகளை பொக்கிஷமாக பாதுகாக்கும் வகையில் குழுப்புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதில் 1985-1988, 1986-1989 ம் ஆண்டு பயின்ற மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் இணைந்து செய்து இருந்தனர்.



Next Story