முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
திருப்பூர்


பெருமாநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை படித்த மாணவர்- மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தங்களுக்கு பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் பீரோ, மின்விசிறி மற்றும் பல பொருள்களை பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கினர். 18 ஆண்டுகளுக்கு முன் 5½ ஏக்கர் நிலத்தை பெருமாநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பால சமுத்திரத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கிய நன்கொடையாளர் ரத்தினசாமி நினைவுகூர்ந்து அவரது மகன் முரளிகுமரேசனை கவுரவப்படுத்தினர். இந்த சந்திப்பில் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story