வளர்ச்சி பணிகளை துணை கலெக்டர் ஆய்வு
கபிஸ்தலம் அருகே வளர்ச்சி பணிகளை துணை கலெக்டர் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி அலுவலகம் கட்டிடம் கட்டுதல், ஆதனூர் ஊராட்சி பாதிரிமேடு, சோழங்கநத்தம் பள்ளி கட்டிட பணிகள், சோழங்கநத்தம் பாசனவாய்க்கால் தூர்வாரும் பணிகள், திருவைக்காவூர் ஊராட்சி புதிய கட்டிடம் கட்டுதல் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் ஆகிய பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி பிரிவு) ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின் போது பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story