வாய்க்கால் தூர்வாரும் பணிகள்உதவி கலெகடர் சங்கீதா ஆய்வு
நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை உதவி கலெகடர் சங்கீதா ஆய்வு செய்தார்.
நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை உதவி கலெகடர் சங்கீதா ஆய்வு செய்தார்.
வாய்க்கால் தூர்வாரும் பணிகள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் சொரக்குடி ஊராட்சியில் நடந்து வரும் பணிகளை உதவி கலெக்டர் சங்கீதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் மூங்கில்குடி ஊராட்சியில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார்.
பணி விவரங்கள்
பின்னர் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் நடைபெறும் காக்கா கோட்டூர் பாசன வாய்க்கால், புலியஞ்சி வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, பணியாளர்களிடம் பணி விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் வாய்க்கால்களை முறைப்படி தூர்வாரும்படி கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், தாசில்தார் ஜெகதீசன், பணி மேற்பார்வையாளர் முருகையன் ஆகியோர் உடன் இருந்தனர்.