பட்டாசு கடைகளில் சப்-கலெக்டர் நேரில் ஆய்வு
வந்தவாசியில் பட்டாசு கடைகளில் சப்-கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசியில் பஜார் வீதி, சீதாராமய்யர் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி காலத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்காக உரிமம் வழங்க கோரி கடை உரிமையாளர்கள் சார்பில் முறைப்படி மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று செய்யாறு சப்-கலெக்டர் மந்தாகினி வந்தவாசியில் உள்ள பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடைகளில் தீயணைப்பான் மற்றும் உள்ளே வெளியே செல்வதற்காக தனித்தனியாக வழி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வந்தவாசி தாசில்தார் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் கலைவாணி, கிராம நிர்வாக அலுவலர் யாசர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story