ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
மயிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
மயிலம்
திண்டிவனம், மயிலம், செஞ்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலை சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா நேற்று முன்தினம் வெளியிட்டார். தொடர்ந்து மயிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் மயிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மயிலம் ஊராட்சி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட அவர் வாக்குச்சாவடி மையம் மற்றும் அரசு நடுநிலை பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் அளவு, காய்கறிகள் எங்கு வாங்கப்படுகிறது என்ற விவரங்களை கேட்டறிந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் வகுப்பறைக்கு சென்று மாணவர்களின் திறன் குறித்து ஆங்கிலம், கணிதத்தில் கேட்டறிந்து சரியாக பதில் சொன்ன மாணவர்களை பாராட்டினார். கணிதத்தில் மாணவர்கள் சிறப்பாக படித்து வருவதாக கூறி கணித ஆசிரியரை பாராட்டினார். அப்போது தாசில்தார் வசந்தகிருஷ்ணன், மண்டல தாசில்தார் விமல்ராஜ், தேர்தல் துணை தாசில்தார் மோகனபிரியா, ஆசிரியர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் விநாயகம், கவுன்சிலர் செல்வகுமார், மயிலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், செயலாளர் சங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.