கொண்டலாம்பட்டியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்


கொண்டலாம்பட்டியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x

கொண்டலாம்பட்டியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சேலம்

சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 57). இவர் அந்த பகுதியில் கிரானைட் கற்கள் விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவர், சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.9 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து அவர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலை செல்போனில் தொடர்பு கொண்டு திருட்டு நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்துமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் செல்கிறேன் என்று பதில் அளித்தார். பின்னர் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக நினைத்த அவர், அந்த போலீஸ் அதிகாரியை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது.

அவரது இந்த பேச்சு இன்ஸ்பெக்டர் செல்போனில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடாவிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார்.


Next Story