அரசு விழாவில் தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போனில் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


அரசு விழாவில் தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போனில் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x

அரசு விழாவில் தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போன் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேட்டில் கடந்த 28-ந் தேதி தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்த இந்த விழாவின் இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்

அப்போது, விழா மேடையின் மிக அருகே பாதுகாப்பு பணியில் இருந்த அமர்ந்தபடியே நாமக்கல் ஆயுதப்படையை சேர்ந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் நாற்காலியில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். தேசிய கீதம் ஒலிப்பதை கூட அறியாமல் மெய்மறந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்த சிவப்பிரகாசத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தேசிய கீதத்தை மதிக்காமல் நாற்காலியில் அமர்ந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசத்தை பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டு உள்ளார்.

ஏற்கனவே பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து, அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story