சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு


சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு

கன்னியாகுமரி

களியக்காவிளை:

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வில்சன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போது பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது 3-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மார்த்தாண்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் போலீசார் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதுபோல் தமிழ்நாடு சிவசேனா மாநில தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் களியக்காவிளை பஸ் நிலையம் அருகில் வில்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், களியக்காவிளை இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமரன், சிந்தாமணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இவரது நினைவு தினத்தை முன்னிட்டு குமரி-கேரள எல்லை சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.


Next Story