போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது தாக்குதல்
காவேரிப்பட்டணத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது தாக்கியது தொடர்பாக இந்து முன்னணி பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணத்தில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ராஜா, பழனியப்பன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சிலர் மது போதையில் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது ஏறியதை போலீசார் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கும் அந்த நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இந்து முன்னணி பிரமுகர் ராஜேஷ் (34) மற்றும் சிலர் சப்-இன்ஸ்பெக்டர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷ் மற்றும் சிலர் மீது காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story