திண்டுக்கல் மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்


திண்டுக்கல் மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் (அடைப்புக்குறிக்குள் தற்போதைய பணியிடம்) விவரம் வருமாறு:-

தாவூத்உசேன் (விளாம்பட்டி) நத்தத்துக்கும், ஜான்சன் ஜெயகுமார் (சாணார்பட்டி) கீரனூருக்கும், குணசேகரன் (கீரனூர்) பழனி அடிவாரத்துக்கும், சாந்தி (கீரனூர்) ஆயக்குடிக்கும், சரவணக்குமார் (ஒட்டன்சத்திரம்) ரெட்டியார்சத்திரத்துக்கும், சரவணன் (ரெட்டியார்சத்திரம்) விருவீட்டுக்கும், பாலகுமாரசாமி (சாமிநாதபுரம்) ஒட்டன்சத்திரத்துக்கும், பிரபாகரன் (வடமதுரை) தாடிக்கொம்புக்கும், கார்த்திக்கேயன் (தாடிக்கொம்பு) வடமதுரைக்கும், விஜயபாண்டியன் (அம்மையநாயக்கனூர்) கொடைக்கானலுக்கும்,

கிருஷ்ணகுமார் (கொடைக்கானல்) அம்மையநாயக்கனூருக்கும், ரைகானா (நிலஅபகரிப்பு மீட்பு பிரிவு) தனிப்பிரிவுக்கும், முத்தமிழ்செல்வி (வடமதுரை அனைத்து மகளிர்) மாவட்ட குற்றப்பிரிவுக்கும், பாக்கியசாமி (நிலஅபகரிப்பு மீட்பு பிரிவு) தாடிக்கொம்புக்கும், ஜலால்முகமது (தாடிக்கொம்பு) நிலஅபகரிப்பு-மீட்பு பிரிவுக்கும், பூபதி (குற்றத்தடுப்பு தனிப்படை) சின்னாளப்பட்டிக்கும், வாசு (திண்டுக்கல் நகர் வடக்கு) விளாம்பட்டிக்கும், தமிழரசி (அம்பாத்துறை) வடமதுரை அனைத்து மகளிருக்கும், ராமநாதபுரத்தில் இருந்து மாறுதலாகி வந்த முத்துகுமார் விளாம்பட்டிக்கும், சிராஜூதீன் சாணார்பட்டிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.


Next Story