துணைதாசில்தார்கள் பணியிட மாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் துணைதாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் துணைதாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
துணைதாசில்தார்கள் பணியிடம்
தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை, சிறைத்துறை பயிற்சி முடிந்து வரும் துணை தாசில்தார்களுக்கு பணியிடம் வழங்கியும், நிர்வாக நலன் கருதி பொது மாறுதல் வழங்கியும் கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாறுதல் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
சிறைத்துறை பயிற்சி முடித்துள்ள 7 துணை தாசில்தார்களுக்கு பணியிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயிற்சி முடித்துள்ள துணை தாசில்தார் சீனிவாசன், தஞ்சை பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக தனித்துணை கலெக்டர் (வருவாய் நீதிமன்ற) அலுவலக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைதாசில்தார் மீனா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், துணைதாசில்தார் பிரான்சிஸ் ஒரத்தநாடு வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், துணைதாசில்தார் மதியழகன், கும்பகோணம் வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரத்தநாடு- பேராவூரணி
துணைதாசில்தார் சுரேஷ், பாபநாசம் வட்ட அலுவலக துணை தாசில்தாராக (தேர்தல்) நியமிக்கப்பட்டுள்ளார். துணைதாசில்தார் பைரோஜாபேகம், மாவட்ட கலெக்டர் அலுவலக எல்.ஆர்.பிரிவு தலைமை உதவியாளராகவும், துணைதாசில்தார் சரவணன், ஒரத்தநாடு வட்ட அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேராவூரணி வட்ட அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் தமயந்தி, பாபநாசம் வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், திருவிடைமருதூர் வட்ட அலுவலக துணை தாசில்தார் (தேர்தல்) சரவணன், கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலக தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவிடைமருதூர் வட்ட அலுவலராக தணை தாசில்தாராக (தேர்தல்), திருவிடைமருதூர் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் ராஜ்குமாருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.