விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல்விதைகள்


விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல்விதைகள்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல்விதைகள் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் ஆடி கடைசி வாரத்தில் நெல் விதைப்பு பணிகளை விவசாயிகள் தொடங்க உள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு தேவையான உயர் விளைச்சல் தரும் சன்னரக ரகங்கள் பி.பி.டி. 43 ஆயிரத்து 800 கிலோ, ஆர்.என்.ஆர். 15 ஆயிரத்து 500 கிலோ, என்.எல்.ஆர். 13 ஆயிரத்து 250 கிலோ என மொத்தம் 72 ஆயிரத்து 550 கிலோ நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் நெல் சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் 22 ஆயிரத்து 500 கிலோ, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தில் 5 ஆயிரத்து 400 கிலோ வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனரால் மானியம் வழங்கப்பட்டது. ஆடி மாத விதைப்பிற்கு 27 ஆயிரத்து 900 கிலோ நெல் விதைகள் மானியத்தில் திருவாடானை வட்டார விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 43 ஆயிரம் கிலோ நெல் விதைகளுக்கு ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனரிடம் இருந்து மானியத்தில் வினியோகம் செய்ய இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நெல் விதைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆவணி மாதம் விதைப்பு செய்யும் விவசாயிகள் திருவாடானை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி மானிய விலையில் விதைநெல் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார்.


Next Story