மீன் வளர்க்க பழங்குடியினர்களுக்கு மானியம் கலெக்டர் தகவல்


மீன் வளர்க்க பழங்குடியினர்களுக்கு மானியம்    கலெக்டர் தகவல்
x

மீன் வளர்க்க பழங்குடியினர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்தாா்.

கடலூர்



கடலூர் மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியினை அதிகப்படுத்திடவும், மீன் வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாகவும், நீரினை மறுசுழற்சி முறையில் சிறிய அளவிலான தொட்டிகள் அமைத்து நன்னீர் மீன்வளர்ப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கான இலக்கு 1 அலகு என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு அலகிற்கான மொத்த செலவின் தொகை ரூ.7.5 லட்சமும், சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்வதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கான இலக்கு 1 அலகு என நிர்ணயிக்கப்பட்டு, அலகிற்கு ஆகும் மொத்த செலவின் தொகை ரூ.7.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களில் மொத்த செலவின் தொகையில் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று, உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story