சாதாரண விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த மானியம்


சாதாரண விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த மானியம்
x

சாதாரண விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சாதாரண விசைத்தறிகளை பயன்படுத்துவோர் 50 சதவீத மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பிக்கலாம். சாதாரண விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும்போது நூலிழைகள் அடிக்கடி அறுந்து விடுவதால் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்கும், உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும் கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்புசாரா விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய மின்னணு பலகை (எலக்ட்ரானிக்) பொருத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தகுதியானவர்கள், இந்த திட்டத்துக்கான விண்ணப்ப படிவங்களை வேலூர் மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story