கால்நடைகளை காப்பீடு செய்வதற்கு மானியம்


கால்நடைகளை காப்பீடு செய்வதற்கு மானியம்
x

கால்நடைகளை காப்பீடு செய்வதற்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர்

கால்நடைகளை காப்பீடு செய்வதற்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தேசிய கால்நடைகள் இயக்கம் 2022-23-ன்படி கால்நடைகளை காப்பீடு செய்ய வேலூர் மாவட்டத்துக்கு 1,100 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியிருனருக்கு 70 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மானியத்திலும் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படும்.

அதன்படி 2½ முதல் 8 வயது வரையிலான பசுக்கள் மற்றும் எருதுகளுக்கும், ஒன்று முதல் 3 வயது வரையிலான ஆடுகளுக்கும், ஒன்று முதல் 5 வயது வரையிலான பன்றிகளுக்கும் காப்பீடு செய்யப்படும். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 கால்நடைகள் காப்பீடு செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story