தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம்விவசாயிகள் மானியம் பெற்று பயன்பெறலாம்கலெக்டர் பழனி தகவல்


தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம்விவசாயிகள் மானியம் பெற்று பயன்பெறலாம்கலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் விவசாயிகள் மானியம் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தோட்டக்கலைத்துறையின் உற்பத்தி மற்றும் திறன் அதிகரிப்பு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை மேற்கொள்ளுதல், அறுவடைக்கு பின்செய் நேர்த்தி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் வழிவகை செய்கிறது. இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் 60:40 என்ற விகிதத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வீரிய ஒட்டுரக காய்கறிகளான கத்திரி, மிளகாய் மற்றும் கொடி வகை காய்கறிகளும் 40 சதவீத மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு வீரிய ஒட்டுரக விதைகள் மற்றும் ஒருங்கிணைந்த உரம், பூச்சி மேலாண்மை இடுபொருட்கள் வழங்கப்படும். பழப்பயிர்களான மா, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை, நெல்லிக்காய், அத்தி ஆகியவற்றுக்கு 40 சதவீத மானியத்திலும், மலர் பயிர்களான மல்லிகை, சாமந்தி, சம்பங்கி பயிர்களுக்கு 40 சதவீத மானியத்திலும் ஹெக்டேருக்கு ரூ.16 ஆயிரம் வீதமும், சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 2 ஹெக்டேருக்கு நடவுச்செடிகள், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து வழங்கப்படும்.

விவசாயிகள் பயன்பெறலாம்

மேலும் தேனீ கூட்டங்களுடனான தேனீப்பெட்டிகள் அமைப்பதற்கு 40 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ஒரு தேனீ கூட்டத்துடன் உள்ள தேனீப்பெட்டிக்கு ரூ.1,600 வீதம் அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 50 எண்கள் வழங்கப்படும். தேன் பிழிந்தெடுக்கும் கருவிகளுக்கு 40 சதவீத மானியத்தில் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும்.

அதேபோல் நகரும் விற்பனை வாகனம் அமைப்பதற்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை ஒரு அலகிற்கு வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை விவசாயிகள் அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story