கள்ளக்குறிச்சியில் மீனவர்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்


கள்ளக்குறிச்சியில்  மீனவர்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம்  கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
x

கள்ளக்குறிச்சியில் மீனவர்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனத்தை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரியின் மத்திய மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், சில்லரை மீன் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் ஐஸ்பெட்டி வசதியுடன் இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி 12 பேருக்கு ஐஸ்பெட்டி வசதியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை வழங்கினார். இதில் ரூ. 69,243 மதிப்பீட்டிலான இருசக்கர வாகனம் மற்றும் ரூ.4,478 மதிப்பில் 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஐஸ்பெட்டி பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியத்திலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 60 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) நித்ய பிரியதர்ஷினி, மீன்வளம், மீனவர் நலத்துறை ஆய்வாளர் சந்திரமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story