நீட் தேர்வில் வெற்றி: மதுரை மருத்துவ கல்லூரியில் சேர்ந்த வளர்ச்சித்திறன் குன்றிய மாணவி


நீட் தேர்வில் வெற்றி: மதுரை மருத்துவ கல்லூரியில் சேர்ந்த வளர்ச்சித்திறன் குன்றிய மாணவி
x

நீட் தேர்வில் வெற்றி: மதுரை மருத்துவ கல்லூரியில் சேர்ந்த வளர்ச்சித்திறன் குன்றிய மாணவி

மதுரை


மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்றுமுன்தினம் தொடங்கின. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 அடிஉயரமுள்ள வளர்ச்சித்திறன் குன்றிய மாணவி நவதாரணி என்பவர், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளார். அவரை, மூத்த மருத்துவ மாணவர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். இதுகுறித்து நவதாரணி கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலக்கோட்டை தான் எனது சொந்த ஊர். என்னுடைய மருத்துவத்திற்காகவும், என்னுடைய சகோதரரின் மருத்துவத்திற்காகவும் அதிக பணத்தை பெற்றோர் செலவழித்து விட்டனர். இருப்பினும் என்னுடைய வளர்ச்சி குறைபாடு சரியாகவில்லை. இதனால், அவர்கள் மருத்துவத்திற்கான பணத்தை என்னுடைய படிப்புக்கு செலவிட முடிவு செய்தனர். அதன்படி, தனியார் பள்ளியில் படித்து பிளஸ்-2 வகுப்பில், 491 மதிப்பெண்கள் பெற்றேன். அதன்பின்னர், எப்படியாவது டாக்டராகி விட வேண்டும் என்பதற்காக, கடினமாக உழைத்தேன். வீட்டில் இருந்தபடியே படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு இட ஒதுக்கீட்டில் மதுரை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தேன். சிறந்த டாக்டராக உருவாகி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை, என்றார்.


Next Story