சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்


சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
x

சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்

நாகப்பட்டினம்

சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாலைப்பணியாளர் சங்க கூட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க அமைப்பு தின கூட்டம் நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி முன்னிலை வகித்தார். வட்டசெயலாளர் ரமேஷ் வரவேற்றார். முன்னதாக அலுவலகம் முன்பு சங்க கொடி ஏற்றப்பட்டது.

ஊதியம் வழங்க வேண்டும்

கூட்டத்தில் சாலைப்பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அதை முறைப்படுத்த வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்விதிறன் பெறாத ஊழியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story