தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரம் நேருநகர் 10-வது தெருவை சேர்ந்த சிவக்குமார் மனைவி பஞ்சவர்ணம் (வயது32). கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் பஞ்சவர்ணம் 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தின் போது 10 பவுன் போட்ட நிலையில் மேலும் பணம், நகை கேட்டு சிவக்குமார் தொல்லை கொடுத்து வந்தாராம். அதனை கொடுக்க வழி இல்லாததால் பஞ்சவர்ணம் தாய் வீட்டிற்கு வந்து விட்டாராம். இந்த சூழ்நிலையில் மீண்டும் கணவன் வீட்டிற்கு சென்ற பஞ்சவர்ணம் தனது அக்காள் கணவர் முருகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் கணவர் பிரச்சினை செய்வதாக கூறி அழுதுள்ளார். இதனால் முருகன் தனது மனைவியுடன் பஞ்சவர்ணம் இருந்த வீட்டிற்கு சென்றபோது பஞ்சவர்ணம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான ஒரு வருடத்திற்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.