சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா
பன்னம்பாறை சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
பசாத்தான்குளம் தாலுகா பன்னம்பாறை உடையடி சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு கும்பம் ஏற்றுதல், நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தா அழைப்பு மற்றும் காப்புக்கட்டுதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு சிவனணைந்த பெருமாள் சுவாமிக்கு கொடை விழா பூஜை, மதியம் 12 மணிக்கு மதியக்கொடை, இரவு 10.30 மணிக்கு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுடலைமுத்து, உறுப்பினர்கள் இசக்கி, கந்தன், பாண்டி, சுடலை, முத்தையா ஆகியோர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story