கீழ்பவானி வாய்க்காலில் திடீர் உடைப்பு


கீழ்பவானி வாய்க்காலில் திடீர் உடைப்பு
x

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

வாய்க்காலில் உடைப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதில் கீழ்பவானி வாய்க்காலில் சத்தியமங்கலத்தை அடுத்த தங்க நகரம் என்ற பகுதிக்கு கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. கீழ்பவானி வாய்க்காலில் இருந்து இந்த கிளை வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் தங்க நகரம் என்ற இடத்தில் உள்ள கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்லும் பகுதியில் திடீரென அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் மளமளவென சென்றது.

பெரிய குழி

மேலும் வாய்க்காலின் மேற்பகுதியில் 6 அடி விட்டம் உள்ள அளவுக்கு பெரிய குழியும் ஏற்பட்டது. அந்த குழியின் வழியாக பார்த்தால் தண்ணீர் சீறிப்பாய்ந்து வேகமாக கிளைவாய்க்காலில் அதிக அளவில் சென்றது. இதுபற்றிய தகவல் அந்த பகுதியில் தீ போல பரவியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தங்கநகரத்தில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இதனிடையே குழி பெரிதாகி உடைப்பு ஏற்படாமல் இருக்க முதல் கட்டமாக கிளைவாய்க்கால் அடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது. இதனால் தண்ணீரின் வேகம் குறைந்ததுடன், கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் ஆபத்து ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ பகுதிக்கு பொதுப்பணித்துறை நிர்வள பிரிவு பொறியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்ததுடன், உடைப்பு ஏற்பட்ட இடத்தை அடைப்பது குறித்து ஆலோசனையும் நடத்தினர். பவானிசாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் குறைந்த பின்னர்தான் இந்த பணியை தொடங்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி ஏராளமான மணல் மூட்டைகள் அந்த பகுதியில் தயார் நிலையில் உள்ளன.


Related Tags :
Next Story