சுரங்கப்பாதை பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் திடீர் மாற்றம்


சுரங்கப்பாதை பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் திடீர் மாற்றம்
x
தினத்தந்தி 13 Jun 2023 1:47 AM IST (Updated: 13 Jun 2023 7:02 AM IST)
t-max-icont-min-icon

சுரங்கப்பாதை பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

மதுரை


மதுரை கோட்டத்தில் சுரங்கப்பாதை பணிக்காக தென் மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து தென்காசி, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் மதுரைக்கு இயக்கப்படுகிறது.

சுரங்கப்பாதை பணி

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட கடம்பூர்-வாஞ்சி மணியாச்சி இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் தென் மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை வழியாக இயக்கப்படும் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22627) இன்று(செவ்வாய்க்கிழமை) விருதுநகர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.22628) இன்று விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்தில் திருச்சிக்கு புறப்படும். கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16322) இன்று திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில்(வ.எண்.16321) இன்று திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு கோவை புறப்பட்டு செல்லும். தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 11 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்ட அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20691) திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில்(வ.எண்.20692) இன்று நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.

தென்காசி வழியாக

அதேபோல, நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு புறப்பட்ட குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) நெல்லையில் இருந்து தென்காசி, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் மதுரை வந்தடையும். இன்று அதிகாலை 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து மும்பை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16340) நெல்லையில் இருந்து தென்காசி, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் மதுரைக்கு இயக்கப்படும்.

ஹவுராவில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12665) தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் உள்ள காரக்பூர் ரெயில்வே கோட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு பணிக்காக நேற்று ரத்து செய்யப்பட்டது.


Next Story