தாதகாப்பட்டியில் 2 மாத ஆண் குழந்தை திடீர் சாவு
தாதகாப்பட்டியில் 2 மாத ஆண் குழந்தை திடீரென்று உயிரிழந்தது.
அன்னதானப்பட்டி
சேலம் தாதகாப்பட்டி கேட், அம்மாள் ஏரி ரோடு, கே.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவருடைய மனைவி நளினி. இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான நளினி பிரசவத்திற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தாயும், சேயும் வீட்டு வந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் குழந்தை அழுது கொண்டே இருந்தது. மேலும் காய்ச்சலுடன் உடல்நிலை மிகவும் மோசமாகியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாதகாப்பட்டியில் 2 மாத ஆண் குழந்தை திடீரென்று உயிரிழந்ததால், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.