பஸ்சில் வந்த பயணி திடீர் சாவு


பஸ்சில் வந்த பயணி திடீர் சாவு
x

உளுந்தூர்பேட்டை அருகே பஸ்சில் வந்த பயணி திடீரென இறந்தார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் பயணிகளுடன் புதுச்சேரி வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த பஸ் நேற்று அதிகாலை 3 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து உள்ள கெடிலம் அருகே வந்தபோது, பஸ்சின் டயர் பஞ்சரானது. இதையடுத்து டிரைவர் பஸ்சை சாலையோரம் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன்பு நிறுத்தினார்.

அப்போது பஸ்சில் வந்த கேரளாவை சேர்ந்த ராபின்மேனன்(வயது 32) என்பவர் பஸ்சில் இருந்து இறங்கி நின்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராபின்மேனன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபின்மேனன் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story