கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி திடீர் சாவு
கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி திடீரென உயிாிழந்தாா்.
கடலூர்
கடலூர் முதுநகர்,
கடலூர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி வேங்கைவாடியை சேர்ந்த குருசாமி (வயது 43) என்பவர், வரஞ்சரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு முதல் விசாரணை கைதியாக மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை குருசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறை காவலர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு குருசாமியை பரிசோதனை செய்த டாக்டாகள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story