கயத்தாறு அருகே கட்டிட தொழிலாளி திடீர் சாவு
கயத்தாறு அருகே கட்டிட தொழிலாளி திடீரென இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தில் ஷாஜகான் மற்றும் துரை என்பவர்களுடைய வீடு கட்டும் பணியில் நாகர்கோவிலை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென கன்னியாகுமரி மாவட்டம் துத்துக்கலைவிளை, பூவங்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளி ஜெயசேகர் (வயது 52) மயங்கி விழுந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு கயத்தாறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஜெயசேகர் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இறந்து போன ஜெயசேகருக்கு வனஜா என்ற மனைவியும் ஆதரஷா (14) மகனும் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் இறந்து போன ஜெயசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் இறந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர்.