மளிகை கடைக்காரர் `திடீர்' சாவு


மளிகை கடைக்காரர் `திடீர் சாவு
x

பாளையங்கோட்டையில் மளிகை கடைக்காரர் `திடீர்' சாவு

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). இவர் அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்று விட்டனர்

இந்த நிலையில் நேற்று காலை அய்யப்பன் நீண்ட நேரமாகியும் கடை திறக்கவில்லை. இதையடுத்து அருகில் உள்ள அவரது உறவினர்கள், அய்யப்பன் வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் மயங்கி கிடந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்ந்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பன் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story