விசாரணை கைதி திடீர் சாவு
விசாரணை கைதி திடீர் என்று இறந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 53). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் கடையில் புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்ததாக சின்னத்துரையை நேற்று காரையூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்ட சின்னத்துரைக்கு இன்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சிறையில் இருந்து ஆம்புலன்சு மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறைக்காவலர்கள் அழைத்து சென்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சின்னத்துரையை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் வரும் வழியிலேயே இறந்தது தெரிந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.